Ad Code

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரும் தடை

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரும் தடை -ஒன்றுபட்டு எதிர்க்க அழைப்பு 





ஸ்ரீலங்கா  நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு அனுமதியோ சந்தர்ப்பமோ வழங்க முடியாது என இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தள்ளார்.





சர்வதேச செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில் ,




தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்காவின் உயரிய நாடாளுமன்ற சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.




இதற்க்கு உதாரணமாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது. அங்கே அது தடை செய்யப்பட்டுள்ளது.




அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்பவர், இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர். என்பதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு பயங்கரவாத அமைப்பு ஆகும் ஆகவே அவர்களை நாடாளுமன்றத்தில் புகழ்ந்து பேச முடியாது.


இலங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.


அவ்வாறு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்னவாகும்.


இதனால், நாடாளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஏமாந்து அரசாங்கம்  முன்னெடுத்து வருகிறது .




இவ்வாறு கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு அனைவரது ஆதரவும் கோரப்பட்டுள்ளது அதற்க்கு  எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றார்.




இப்படியான ஸ்ரீலங்கா அரசின் செயற்பாடுகள் இலங்கையில் தமிழர்களின் பேச்சு சுகந்திரத்தை நசுக்கும் ஒரு செயற்பாடு என்பதுடன் தமிழர்களின் உரிமை போராட்டத்தை வெளியில் பேசுவதை தடுக்கும் செயற்பாடு என தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.




அதே நேரம் தமிழர்களின் உரிமை போராடடத்துக்கு தலைமை வகித்து அறவழியில் போராடி அதற்க்கு தீர்வு கிடைக்காததால் ஆயுத போராட்த்தின் மூலம் பல வெற்றிகளை பெற்று உலக நாடுகளின் உதவியுடன் அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை சர்வாதிகாரியான பல யூதர்களை கொலை செய்த ஹிட்லருடன் தொடர்ப்பு படுத்தியிருப்பதும் உலகில் வாழும் தமிழர்கள் மத்தியில் சினத்தை அதிகரித்துள்ளது.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சீற்றம் 


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை கொலை செய்யவில்லை என  இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்தெரிவித்துள்ளார் .


அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பொது மக்களை கொலை செய்தார்கள் என்பது, ஆதரமற்ற ஒரு போலியான விசமத்தனமான குற்றச்சாட்டு எனவும் அவர் கூறியுள்ளார்.


இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர, மோசமான இனவெறி சிந்தனைக்குள் புதைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்  குறிப்பிடுகின்றார்.


இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற கடும் யுத்தத்தின் போது, தமிழர்கள் மீது, இலங்கையின் முப்படைகளே தாக்குதல்களை நடத்தி தமிழர்களை கொலை செய்ததாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


ஸ்ரீலங்கா அரச படைகள் மற்றும் ஸ்ரீலங்கா  அரசாங்கத்தின் மீது பாரிய யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இனவழிப்பு குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும், அதனை சரத் வீரசேகரவும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


தமிழ் மக்களுக்களின் விடுதலைக்காக  போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதை தடுப்பதற்கும், தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்குவதற்காகவுமே, அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.


இதுவொரு ஸ்ரீலங்கா அரசின் முழுமையாக ஜனநாயக விரோத செயற்பாடு என கூறிய அவர், அவ்வாறான சட்டமூலம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக தாம் கடுமையாக செயற்பட போவதாகவும் குறிப்பிட்டார்.


இவ்வாறான செயற்பாடொன்றை இலங்கை அரசாங்கம் செய்யும் பட்சத்தில், சர்வதேசத்திற்கு முன்பாக தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்தார் .


தமிழர்களை நசுக்கும் இந்த செயற்பாட்டுக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

இப்படியான கடும்போக்கு தனமான ஸ்ரீலங்கா அரசின் தமிழின விரோத செயற்பட்டுக்கு எதிராக கட்சி பேதமின்றி தமிழர்களை ஒன்றிணைய தமிழ் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை இனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைக்கு எதிராக எதிர்ப்புக்களை வெளிக்காட்டி தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உற்படுத்தும் கோத்தபாய அரசுக்கு எதிராக அணிதிரள தமிழ் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது 


Post a Comment

0 Comments

Close Menu