Ad Code

யாழ்.மாநகர சபையில் கோமாளித்தனங்களிற்கு குறைவில்லாமல் அங்கே பல நிகழ்வுகள் நடைபெற்று வருகினறன.

யாழ்.மாநகர சபையில் கோமாளித்தனங்களிற்கு குறைவில்லாமல் அங்கே பல நிகழ்வுகள் நடைபெற்று வருகினறன.

யாழ்.மாநகர சபையில் மக்கள் பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படுகின்றதோ இல்லையோ கோமாளித்தனங்களிற்கு குறைவில்லாமல் அங்கே பல நிகழ்வுகள் நடைபெற்று வருகினறன.
 தனிநாட்டுக்காக போராடிய தமிழினம் மாகாண அமைச்சுக்கு மாநகர மேயர் பதவிக்கும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள் .

சண்டை போடுவதுடன் இல்லாமல் அந்த சபையை கூட ஒழுங்காக நடத்த தெரியாமல் சிறுபிள்ளைகள் போல் சபைகளில் நடந்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மாகாண , மாநகர சபையை கூட நடத்த தெரியாத இவர்கள் எப்படி தனி நாட்டை நடத்துவார்கள் என குமுறிக்கொண்டு இருக்கிறார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மிகவும் நேர்த்தியாக ஒரு தனியரசை நடத்தி வந்த ஒட்டு இனம் இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளது.அதற்க்கு சிறந்த தலைவர் இப்போது தமிழர்கள் இடத்தில் இல்லை என்பதே ஒரு காரணமாக நோக்கப்படுகிறது . தனக்கு ஒரு தலைமை இல்லாமல் இருந்த தலைமையை பறிகொடுத்து விட்டு தமிழ் இனம் யாருமற்ற ஒரு அனாதையாக இருப்பதே தமிழ் இனத்தின் இன்றைய நிலைக்கு காரணமாக நோக்கப்படுகிறது. தமிழர்களை ஓரணியில் திரடட தகுந்த தலைமை வரும் வரை தமிழர்களின் நிலை இப்படித்தான் இருக்குமோ என்ற நிலை தோன்றியுள்ளது 

ஈபிடிபி ஆதரவுடன் மாநகர சபையை ஆட்சி செய்யும் மணிவண்ணன் தலைமையிலான அணியில் மணிவண்ணன் யாழ் மாநகர மேயராக இருந்து வருகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில்  அங்கம் வகிக்கும்    புளொட் அமைப்பின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட  யாழ் மாநகர உறுப்பினர் ப.தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்துகொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் சபையில் இன்று குற்றச்சட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் யாழ் பல்கலையில் கல்வி கற்றுவரும் சமயம் தர்சனத் மீது இராணுவ ஆதரவுடன் இயங்கிய ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் அந்த தாக்குதலை நடத்த்தியவர்கள் ஈபிடிபி உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக புளொட் அமைப்பின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட  யாழ் மாநகர உறுப்பினர் ப.தர்சானந் தன்மீது தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனைக்கு தான் கூட  தயாராக இருப்பதாக ப.தர்சானந் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் குறித்த மது அருந்தியது தொடர்பான  பரிசோதனையினை சட்ட வைத்திய அதிகாயால் தான் மட்டுமே பரிசோதிக்க முடியும் எனவும் அதற்காக தான் எழுத்து மூலமாக எழுதி அவரை அனுப்புவதாக தெரிவித்திருந்தார்.


 
இதனை தொடர்ந்து யாழ் மாநகர உறுப்பினர் தர்சானந் விரும்பியதால்  மது அருத்தியது தொடர்பான பரிசோதனைக்கு செல்லுமாறு  மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவரிடம் நேரடியாக  தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தான் பரிசோதனைக்கு செல்லாது,  சபை அமர்பில் கலந்துகொள்ள விரும்பவில்லை என தெரிவித்து புளொட் அமைப்பின் மாநகர உறுப்பினர் தர்சானந் மாநகர நிகழ்வுகளில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

அதேபோன்று யாழ்.மாநகர சபை முதல்வரின் வாகனத்திற்கு,  சபை சாரதி அல்லாமல் வேறு ஒரு சாரதியை நியமிப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பு 20 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.

மாநகர சபையின் முதல்வர் தான் தனிப்பட்ட வகையில் தனக்கு நம்பிக்கையான சாரதி ஒருவரை நியமிப்பது தொடர்பன பிரேரனை ஒன்றை  சபையில் முன்வைத்திருந்தார்.இந்த பிரேரணைக்கு ஈபிடிபி ஆதரவு வழங்க பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விடையம் தொடர்பில் இன்றைய சபை அமர்பில் நீண்ட நேர வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தது.

இறுதியில் இதனை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கலாம் என உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் 25 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்ளிக்க 10 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

அத்தோடு 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத அதே வேளை 3 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.

இதன் மூலம் 20 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சபைக்கு சொந்தமான வாகனத்தினை பயன்படுத்தாமல் தனது சொந்த வாகனத்தை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.அதே சமயம் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது முதல் மாத சம்பளத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல தமிழர்கள் காணாமல் போகவும் தமிழர்களால் துரோகிகள் என குற்றம் சாட்டப்படும் ஈபிடிபி அமைப்பின் ஆதரவுடன் யார் மாநகர மேயராக பதவியை எடுத்து விட்டு அந்த பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்க நிதி வழங்கியது தொடர்பாக விமர்ச்சனத்துக்கும் மேயர் மணிவண்ணன் உள்ளாகியுள்ளார்.

 

Post a Comment

2 Comments

  1. Marcel’s ability to instantly captivate all along with 아벤카지노 his creativity, merges in harmony with Decorté’s creations that mesmerise with their delicate fragrance and texture. This will allow you to get familiar with the foundations and the way the game is performed. Among other things, guests will find a daily dose of articles with the latest poker information, stay reporting from tournaments, exclusive movies, podcasts, evaluations and bonuses and a lot extra.

    ReplyDelete
  2. Our purpose is to disrupt the trade by making gaming both enjoyable and SM카지노 honest for everybody. According to the regulation of probabilities, which means for each 37 bets positioned on the ball landing on the quantity seven, the guess may be anticipated to win quickly as}. As a result, if you positioned this guess 37 occasions, betting €1 each time, you'll be anticipated to get again €36 from €37 value of bets. Bonus Spin Xtreme elevates the player expertise by creating extra methods to win and have enjoyable on the table.

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu