தற்போதைய நிலைமையில் கொரோனா நிலைமை மேலும் தீவிரமடைந்தால் இலங்கை நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை முழுமையாக தற்போது முடக்குவது எளிதானதல்ல. பொருளாதாரம் பாதிக்கப்படடாலும் ' தொற்றிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால், நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் கொழும்பில் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி கூட பெறாதவர்களை காவல்துறை வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்களை நபர்களை சமூக காவல்துறை தேடுவதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
கொழும்பு மாவட்டத்தில் முதல் டோஸ் பெறாதவர்களுக்கு சுகததாஸ விளையாட்டரங்கில் தடுப்பூசி திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகததாச விளையாட்டரங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்
1 Comments
A complete list could be discovered in the FAQ section or the cashier section. You should also to|must also} keep in mind to offer solely accurate information so that in the future you will not have problems with working with the funds in your account steadiness. You can shortly and effectively go through the process of making a personal account proper on the location. You will want a valid e-mail handle, telephone quantity, and a complex https://vkfkdhzkwlsh.com/ password. Even a newcomer to the gambling business can address filling out the registration kind.
ReplyDelete