டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தங்கத்திற்கு வரிவிதிப்புகள் இல்லாமல் விலக்கு அளித்திருந்ததால், கடந்த சில மாதங்களில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தங்கம் தற்போது சுவிட்சர்லாந்துக்கு திரும்பி செல்கிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் சுவிட்சர்லாந்து, 25.5 மெட்ரிக் டன் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 13 மாதங்களில் ஏற்பட்ட மிக உயர்ந்த அளவான இறக்குமதியாகும். அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் தங்கத்தின் ஏற்றுமதி 32 சதவிகிதம் குறைந்து 103.2 மெட்ரிக் டன் ஆகும் அளவுக்கு சரிந்துள்ளது. COMEX களஞ்சியங்களில் தங்கத்தின் கையிருப்பும் தொடர்ந்து குறைந்து வருகின்றது.
ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 45.1 மில்லியன் அவுன்ஸ் தங்கம் இருந்த நிலையில், தற்போது அது 43.6 மில்லியன் அவுன்ஸாக குறைந்துள்ளது. இது சுமார் 1.5 மில்லியன் அவுன்ஸ் குறைவாகும், மதிப்பில் இதன் அளவு 4.8 பில்லியன் அமெரிக்க டொலராக கணிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து உலகளாவிய தங்க சுத்திகரிப்பு மற்றும் கையிருப்பு மாற்றங்களை சீரமைக்கும் முக்கிய மையமாக இருந்ததால், தற்போது ஏற்படும் இந்த மாற்றம் பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவதை சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச வர்த்தக சூழ்நிலையின் மாறுபாடுகள் தங்கத்தின் நகர்வில் முக்கிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments